சிறுமியிடம் சில்மிஷம் மதபோதகர் போக்சோ சட்டத்தில் கைது - வள்ளியூரில் பரபரப்பு

சிறுமியிடம் சில்மிஷம் மதபோதகர் போக்சோ சட்டத்தில் கைது - வள்ளியூரில் பரபரப்பு


நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக  மதபோதகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையை சேர்ந்த செல்வராஜ் (52). இவர் வள்ளியூர் அருகே வடக்கன்குளத்தில் ஜெபவீடு வைத்து நடத்தி வந்துள்ளார். அப்போது அந்த ஜெபவீட்டிற்கு ஒரு குடும்பம் வந்து சென்றுள்ளது. இதில் 8வயது சிறுமி ஜெப வீட்டில் சிறு உதவிகள் செய்து வருவது வழக்கம் என தெரிகிறது. இந்நிலையில் செல்வராஜ் அந்த சிறுமியிடம் அடிக்கடி பாலியல் சில்மிஷம் செய்து வந்துள்ளார், 


இது குறித்து சிறுமி தனது குடும்பத்தினரிடம் கூறவே வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பள்ளி சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக செல்வராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 


Popular posts
பண்ருட்டியில் ஸ்ரீஅம்மாஅறக்கட்டளை மற்றும் நகராட்சி சார்பில் கொரோனா தடுப்புதூய்மைபணி சத்யா பன்னீர் செல்வம், எம்.எல்.ஏ., இன்று காலை நேரில் ஆய்வு
Image
ஆம்பூர் அருகே 10 நாட்களுக்கு முன் மாயமானவர் பெண்ணை அடித்துக் கொன்று சடலமாக கல்குவாரியில் வீச்சு
Image
ஆம்பூர் அருகே ஆழ்துளை கிணற்றை பழுது பார்க்கும் இயந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து தீ பற்றியதால் தந்தை உயிரிழப்பு மகன் மற்றும் ஊழியர் படுகாயம்
Image
துறையூர் கூட்டுறவு வேளாண்மை சங்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.30.38 லட்சம் கடன் உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்
Image