துறையூர் கூட்டுறவு வேளாண்மை சங்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.30.38 லட்சம் கடன் உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்

துறையூர் கூட்டுறவு வேளாண்மை சங்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.30.38 லட்சம் கடன் உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்" alt="" aria-hidden="true" />


துறையூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கம் சார்பில் 9 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.30.38 லட்சம் மதிப்பில் சிறுவணிக கடன் உதவிக்கான காசோலையினை அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜூ, உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் துறையூர் ஊராட்சி பகுதி மற்றும் தெற்கு வண்டானம் ஊராட்சி பகுதியில் தலா ரூ.31.50 இலட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கட்டப்பட்ட கால்நடை மருந்தகம் திறப்பு விழா மற்றும் திலி தனி துறையூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  கால்நடை மருந்தகத்தினை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து கல்வெட்டினை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், 9 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.30.38 லட்சம் மதிப்பில் சிறுவணிக கடன் உதவிக்கான காசோலையினை வழங்கினார்.


தொடர்ந்து திலி தனி துறையூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கம் சார்பில் 9 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.30.38 லட்சம் மதிப்பில் சிறுவணிக கடனுக்காக காசோலையினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ,  கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள். முன்னதாக கால்நடைகளுக்கு நடமாடும் மருத்துவ அவசர ஊர்தி 1962ஐ பார்வையிட்டார்கள்.


நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், திலி தனி துறையூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கம்; தலைவர் துறையூர் கணேஸ்பாண்டியன், மாவட்ட கவுன்சிலர்கள் சந்திரசேகர், தங்கமாரியம்மாள், ஊராட்சி தலைவர்கள் சண்முகலெட்சுமி (துறையூர்), கனகராஜ் (தெற்கு வண்டானம்), கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர்கள் மணிகண்டன் (கோவில்பட்டி), பாஸ்கரன் (கயத்தாறு), கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் முனைவர் சத்யநாராயணன், உதவி இயக்குநர்கள் சங்கரநாராயணன் (கோவில்பட்டி), மரு.அந்தோணிரேஷ் (தூத்துக்குடி), செல்வகுமார் (திருச்செந்தூர்), முன்னாள் ஆவின் தலைவர் ஆறுமுகநயினார், முக்கிய பிரமுகர்கள் அய்யாத்துரைபாண்டியன், விஜயபாண்யடின், ராமச்சந்திரன், வினோபாஜி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


Popular posts
சிறுமியிடம் சில்மிஷம் மதபோதகர் போக்சோ சட்டத்தில் கைது - வள்ளியூரில் பரபரப்பு
பண்ருட்டியில் ஸ்ரீஅம்மாஅறக்கட்டளை மற்றும் நகராட்சி சார்பில் கொரோனா தடுப்புதூய்மைபணி சத்யா பன்னீர் செல்வம், எம்.எல்.ஏ., இன்று காலை நேரில் ஆய்வு
Image
உலக நன்மை வேண்டியும், உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் மக்களிடையே பரவாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி
Image
திருவொற்றியூரில் தமிழக அரசின் கொரோனா நிவாரணம் இன்று முதல் வழங்கப்பட்டது
Image