" alt="" aria-hidden="true" />
ஆம்பூர் அருகே ஆழ்துளை கிணற்றை பழுது பார்க்கும் இயந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து தீ பற்றியதால் தந்தை உயிரிழப்பு மகன் மற்றும் ஊழியர் படுகாயம்
" alt="" aria-hidden="true" />
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி வன்னியநாதபுரம் பகுதியில் அரிவேல் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது இதில் நெல்,மாட்டு தீவனம் போன்ற பயிர்களை பயிரிட்டு உள்ளார் இதற்காக அவர் ஏற்கனவே அமைத்திருந்த ஆள்துளை கிணறு பழுதானதால் அருகாமையில் உள்ள நரியம்பட்டு பகுதியை சேர்ந்த மேத்யூ என்பவருடைய பழுது பார்க்கும் இயந்திரத்தை கொண்டு ஆழ்துளை கிணற்றை சரி செய்ய முயன்றபோது அருகாமையில் இருந்த உயர் மின் கம்பி மீது உரசியதில் பணியிலிருந்த மேத்யூ அவரது மகன் சஞ்சய் மற்றும் ஊழியர் சந்தோஷ் ஆகியோர் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே மேத்யூ உயிரிழந்தார் அவரது மகன் சஞ்சய் மற்றும் ஊழியர் சந்தோஷ் ஆகியோர் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்