திருநெல்வேலியில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு மாணவர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது இதனடிப்படையில் நெல்லையில் உள்ள வ.உ.சி மைதானத்தில் போலீசார்

திருநெல்வேலியில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு மாணவர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது இதனடிப்படையில் நெல்லையில் உள்ள வ.உ.சி மைதானத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்


குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது 


இந்நிலையில் நேற்று பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மைதானத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளது வாட்ஸ் அப்பில் பரப்பி உள்ளனர்


போலீஸ் குவிப்பு


இதனையடுத்து பாளையங்கோட்டை வ. உ .சி மைதானத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
 
வாசலில் வைத்து சோதனை மேற்கொண்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர் அங்கு மாணவர்கள் கூட்டமாக வருவதற்கு தடை செய்யப்பட்டிருந்தது இருப்பினும் ஒருசில மாணவர்கள் கருப்புச்சட்டை அணிந்து கொண்டு சைக்கிளில் வந்தனர்போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர் இதனால் அந்த பகுதிகளில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு நிலவியது