குன்னூர் காட்டேரி பூங்காவில் வரும் கோடை சீசனுக்காக 1.50 லட்சம் விதைகள் மற்றும் நாற்றுகள் நடவும் பணி துவங்கியது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆண்டுதோறும் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். அதனை காண உள் நாடு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர். இவர்களை கவரும் வகையில் இந்தாண்டு பல்வேறு வகையான மலர் நாற்றுகளும் மற்றும் 3000க்கும் மேற்பட்ட வகையிலான மலர் விதைகளும் தற்போது இறுதி கட்டமாக நடவும் பணி இன்று துவங்கியது. இதில் குறிப்பாக சால்வியா, டேலியா, மெரி கோல்ட், உட்பட பல்வேறு வகையான மலர் நாற்றுகளை தோட்டக்கலை பணியாளர்கள் மற்றும் பூங்கா ஊழியர்கள் நடவு செய்தனர். வரும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகள் பூத்துக்குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குன்னூர் காட்டேரி பூங்காவில் வரும் கோடை சீசனுக்காக 1.50 லட்சம் விதைகள் மற்றும் நாற்றுகள் நடவும் பணி துவங்கியது.